அவளின் விரல்களில் அமர்ந்திருந்தது
வண்ணத்துப்பூச்சி
பறந்து செல்வதற்கு மனமற்று
அவளையே வனமென்று கொண்டது
விரல்களை
கிளையென்னும்
உதடுகளை மலரென்றும்
அமர்ந்தமர்ந்து உணர்ந்தது வண்ணத்துப்பூச்சி
தன்னில் பதிந்த வண்ணங்களை
அகற்ற விரும்பாது
அவள் சேகரிக்கிறாள் தன் மேனியெங்கும்
பல வண்ணங்களை
பிறகு
அவளே வண்ணத்துப்
பூச்சியென பறக்கிறாள்
அவளது ஆகாயத்தில்
அவளது தோட்டத்தில்
அவளது உதடுகள் மலர்கின்றன
அவளது கைகள் விரிகின்றன
நிலத்திலிருந்து எழுந்த தருணம்
அவளிடமிருந்து பறக்கிறது
ஓராயிரம்
வண்ணத்துப்பூச்சிகள்.
1 comment:
குருத்தாய் மலர்ந்த பெண்,தன் மேல் பதிந்த அணைத்து பண்பு நலம்களையும் சேர்த்து களிநடனம் புரிந்து..
அந்த நற்பண்புகளை தன்னுடன் எடுத்து ,அவளே வண்ணத்துப் பூச்சியென பறக்கிறாள்
அவளே ஆகாயம் ..அவளே நிலம்..அவளக்கு அவளே உலகம்..
உதடுகள் மலர , அங்கிருந்து ஆயிரம் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்..
எதை அவள் எடுதுக்கொண்டோலோ ..பின், அதுவே ,அவளிடமிர்ந்து ...
இங்கு, உலகின் மகிழ்ச்சியின் உயிர்ப்பு அவள்தான்..
வண்ணங்களின் பிறப்பிடம்..நம் மனதை கொள்ளை ...
Post a Comment