பெயர் அற்றுப்
போனவள் நான்
நிலமென என்னைச் சொல்கிறேன்
என் நிலத்தில் புல் பூண்டுகள் முளைக்கின்றன
செடி கொடிகள் தழைக்கின்றன
மரங்கள் வளர்ந்து வான் தொடுகின்றன
அவற்றுக்காக
நான் செய்வது ஒன்றுமே இல்லை
என் நிலத்தில் புல் பூண்டுகள் முளைக்கின்றன
செடி கொடிகள் தழைக்கின்றன
மரங்கள் வளர்ந்து வான் தொடுகின்றன
அவற்றுக்காக
நான் செய்வது ஒன்றுமே இல்லை
காய்த்து
வெடிப்புற்றுக்
கசிந்த விதைகளை
என்னுள் ஏந்திக்
கொள்கிறேன்
என்பதைத்
தவிரவும்
என் சொற்கள்
நிலமாய் அமைதி காக்கின்றன
பொறுத்திருக்கின்றன
பொறுத்திருக்கின்றன
ஆழ் பிளவில்
புதையுண்ட
விதைகளும்
காயங்களும்
குருதியில்
நனைந்தூறி உப்பலாகின்றன
பின்பு
முளைவிடுகிற
தளிர் பசுமையில்
புதைவுறுகின்றன
வடுக்கள்
பின்னும்
வான் தாண்டும்
கனவுகளைக்
கிளை
பரப்புகிறேன் .
No comments:
Post a Comment