Pages

Thursday, 30 May 2013

அன்பில் நனைந்த மழை. . .


நாம் உள்ளே இருக்கையில்
மழை வெளியே பொழிகிறது

இது
கோடைகாலம் அல்ல
மழைகாலமும் இல்லை
வெயில் மயங்கிய மாலையில்
மழை பொழியுமென
நடந்து கொண்டிருந்தோம்
மழையில் நனைவதற்கெனவும்

முன்பொரு நாள்
மழையற்ற காலத்தில்
மழையை
முன்வைத்து பேசிக்கொண்டிருதோம்
நாம் பார்த்தபடியிருக்க
கடந்து சென்றது மழை

மழைக்காலம் முடிவுக்கு வருகிற
பின்பொரு நாள்
தனித்திருக்கையில்
துளித்துளியாய்ச் சொட்டி
நிலம் நனைக்கும்


கடந்து சென்ற
நினைவிலிருக்கும் அந்த மழை .

No comments:

Post a Comment