Pages

Thursday, 30 May 2013

.மயில் அகவல் . . .

இப்பொழுது
நம்மை நாமே கடந்து கொண்டிருக்கிறோமா

சில நேரங்களில் சொற்களினால்
பிறகு
மௌனத்தால்
அதன் பிறகு
கண்ணீரால்

நம்மிடையேயான தூரத்தை
எப்படிக் கடந்து செல்வது
நம் நெருக்கத்திலிருந்து
எப்படி விலகுவது

இலையின் மேல் உருளும் பனித்துளியென
உருண்டோடிக் கொண்டிருக்கிறது
இருவருக்குமிடையேயுள்ள
கேள்விகள்

இடைவெளியை நிரப்புவதற்கான
அவகாசத்தை
ஏன் தரவில்லை
இந்த நிலவு

நிலாக் காயும்
பனி பொழியும்
இந்த நிசியில்
மயில்
உன் நெருக்கத்தை
என்னிடம் பாடிக்கொண்டிருக்கிறது .

No comments:

Post a Comment