Pages

Thursday, 30 May 2013

ஒளிரும் மின்மினி. . .


பருவம்
தவறி வளரும் பயிரென
உன்
காதல்
வந்தடைந்து தழுவுகிறது
என்னை

ஆற்றுப்படுத்த இயலாமல்
உன் நெஞ்சில்
பனியென
உறைந்திருக்கும்
நான்

கடும் குளிர் பனியால்
விரைந்து கிடைக்கும்
இந்த
மென்னுடலை

உன்
நினைவின்
சுடர் கொண்டு
கதகதப் பூட்டிக் கொள்வது

நெஞ்சறிந்து கொள்கிறது
இந்த
மின்மினிப் பூச்சிகள்
ஒளிரும்
நள்ளிரவில் .

No comments:

Post a Comment