மருதாணியின்
ஆரஞ்சுவர்ண விரல்களோடு
அவனுள் கிளைவிடுகிறாள்
முதிர்ந்த மரத்தின்
மரப்பட்டைகள் உதிர்வது
போல
அவனது காலம்
மடிகிறது
அவள் முன்
கருங்குவளை நீலவிழிகளில்
தீண்டுகிறாள்
தீண்டல் இன்பம் போதாதென
நினைவிழக்கிறான்
ஆம்பலின் சுகந்தம்
கொண்ட இதழ்களால்
அவனை உயிர்ப்பிக்கிறாள்
மரணம் உறுதியான
பிறகும்
உயிர்ப்பிக்கும் கலையை
அறிந்தவளிடம் வேண்டுகிறான்
காற்றாய்
அவள் அசைய
அவன்
வெளியெங்கும் பரவி
மறைகிறான் .
No comments:
Post a Comment