Pages

Sunday, 4 May 2014

காலை - பிப்ரவரி 7






மினுங்கும் கண்களில் வேகமூட்டும் ஒருத்தி
அரங்கம்  முழுக்க சுழன்றாடுகிறாள்
ஆட்டத்தின் இடையே கீழிறங்கி
பார்வையாளர்களின் மனதிலுரசுவதுபோலத்
தோன்றி மறைகிறாள்
மின்னல் கணத்தில்
காமாந்தகமாக  நங்கூரமிடுகிறாள்
காற்றின் புல்வெளி அலைவுகளைப்போல
புகைவெளியில் மிதந்து கடக்கிறாள்
மதுக்குப்பிகளிலிருந்து
குவளையில் சாய்க்கப்படுகிறாள்
மங்கிய ஒளியில்
பனித்த அவள் கண்களின் கடிகாரம்
மூன்று மணி உணர்த்த 
திறந்த கண்களை மூடி
பூட்டிய மனதைத் திறக்கையில்
அவளின் அதிகாலை துவங்குகிறது .
%

No comments:

Post a Comment