Pages

Monday, 5 May 2014

காலை - பிப்ரவரி 28





பால்ய இரகசியங்களை
மீன்களாக
வரைந்து கொண்டிருப்பவள் அவள்
காகிதங்களில் சுவர்களில்
மேலும் காணும் இடத்தில் எல்லாம்

வலையிடுவதாகவும்
தூண்டிலிடுவதாகவும்
பின்னும்
மீன்கள் நீந்திக் கடப்பதாகவும் வரைகிறாள்

ஆற்றினை வரைகிறாள்
எங்கும் பிரவாகம்
நிலம் நிறைகிறது
கடல் உயர்கிறது
வண்ணம் தீட்டுகிறாள்
மீன்களால் நிரம்புகிறது நீர்நிலைகள்
வெண்மையாக
அப்படியே விடுகிறாள்
மீன்களாக ஒளிர்கிறது
வான்வெளியெங்கும்

போதாமல்
தன் கண்களில் வரைகிறாள்
அவளுள் உயிர்த்து
அவனது அதிகாலையில்
வடக்கே ஒளிரத் துவங்குகிறாள் துருவ மீனாக.
%

No comments:

Post a Comment