Pages

Monday, 5 May 2014

காலை - பிப்ரவரி 26





இரவின் துவக்கத்தில்
முதலில் வந்த ஒருவனுடன்
எதிர்பாராத கணத்தில்
துளிர்த்த காதலைத் துடைத்தாள்

மனதின் அடுக்குகளுக்குள்
அரூபமாக ஒளிந்திருக்கும் காதலை
முன்பே அழித்தெறிந்தான் முன்பொருவன் 

இப்பொழுதெல்லாம்
வரிசையில் காத்திருக்கும் அடுத்தவனுடைய
காமத்தின் நெருப்பினைப் பற்றவைக்கப்  
பயன்படுத்திக்கொண்டாள்
தசையென அசையும் மானுட நெருப்பு
திறந்த கதவிடுக்குகளின் வழிபுகுந்து
அவளின் நீர்மையை எரித்தது
இப்படியே நீள்கிற அவளின் பணியிரவு முடிந்து
வெந்நீராட விரும்பிய கணத்தில்  
காலத்தைக் கணிக்கும் அவளுடலின்
உறக்கப் பொழுதாக
அதிகாலை துவங்கியது 
%

No comments:

Post a Comment