Pages

Monday, 5 May 2014

காலை - பிப்ரவரி 25




சிள்வண்டுகள் மௌனிக்கும் அதிகாலையில்
ஒரு கவிதை எழுதத் தோன்றியது
இரவெல்லாம் மௌனம் கிழித்த
அதன் சத்தம் பற்றி எழுதலாம்
குளிர் உறுத்தும் இருளின்
விளக்கணைப்புக் கணம் பற்றி எழுதலாம்
அத்தனை உறுத்தாத
துரோகத்தைப் பற்றி எழுதலாம்
இரவின் உச்சத் தீ கிளர்த்திய 
முத்தம் பற்றி எழுதலாம்
மேலான நட்பின் கைவிடல் பற்றி எழுதலாம்
முன்னிரவில் குடித்துத் தீராத
மதுவின் வாசனை பற்றி எழுதலாம்
எதுவாகினும் அது
காதலைப் பற்றியதாக மட்டுமே 
இருக்கும் என்றறிவேன் .
%


Courtesy : Painting -prabhat-biswas

No comments:

Post a Comment