Pages

Monday, 5 May 2014

மார்ச் - காலை 1





பகலின் வழிகள் நீளமானதும்
புதிர்கள் நிறைந்ததும்

மரணத்தைப்போல
தொலைவில் காத்திருக்கும் இரவை அடையும்முன்
இன்று
ஒரு நண்பன் பகைவனாகலாம்
அல்லது வெறுக்கத்தக்க வகையில்
காயங்களை ஏற்படுத்துமொருவன் நண்பனாகலாம்
அல்லது முகமுகமாய் நம்மையே நாம் காண
விரும்பாத செயலில் இறங்கலாம்

ஏதுமறியாது
இந்தக்காலையைத் துவங்குகிறோம்
எனினும்
நமக்குத் தெரியும்
உயிர்ப்புடன் வாழ்வதற்கான
நம்பிக்கைகளும்
காதலுக்கான நீரோட்டமும்
கணந்தோறும் துளிர்த்துக்கொண்டிருப்பது.
%

No comments:

Post a Comment