Pages

Thursday, 30 May 2013

கடத்தல். . .



ஒரு போதும்
உணர்ந்த அன்பை
சொற்களில் வெளிப்படுத்த முடிந்ததில்லை

ஒரு மரம்
முறிந்து விழும்
ஓசையைப் போன்றது
அல்லது
கழுத்து அறுபடும்
ஆட்டின் குரலைப் போன்றது

எத்தனை முயன்றும்
உடலில் பெருகும்
வெளிச்சத்தை
விளக்க இயன்றதேயில்லை

ஓர் இலக்கை
நோக்கிச் செல்லும்போது
அது
நம்மை நோக்கி வருவதுபோல்
இந்த அன்பு
நெருங்குகின்றது

பட்ட காயங்களும்
ஏற்பட்ட புண்களும்
ஒரு பார்வையில்
மேலும்
அன்பினை ஏற்படுத்துகின்றன


வார்த்தைகளில் நம்பிக்கையற்றுக்
கண்களில் சரணடைகிறேன்

ஒரு துளி
கண்ணீர் வழியாக
கடந்து செல்கிறது
அன்பு .

No comments:

Post a Comment