Pages

Thursday, 30 May 2013

தருணம் . . .



எப்பொழுதுமே
தென்றல் வீசுவதில்லை

புழுக்கம் நிறைந்த
தூசுகள் படிந்த
மனவெளிகளிடையே பயணம் செய்கையில்
சற்று
தென்றலைத் தழுவத் தோன்றுகிறது

மனத்தின்
ஓட்டத்தை துரத்திக்கொண்டிருக்கும்
வாகனத்திற்கு வெளியே
கொதித்துக்கொண்டிருக்கிறது
காற்று

இன்னும் சற்று நேரத்தில்
பணியால்
நடுங்கி தவிக்கப்போகிறது
இந்தக் காற்று

ஜன்னல்களைத் திறந்து வைத்தபோது
வராத தென்றல்
மூடிய
ஜன்னல் கதவுகளைத் தட்டுகிறது

எப்பொழுதும்
ஜன்னல் கதவுகள்
திறந்தே இருப்பதில்லை .

No comments:

Post a Comment