Pages

Sunday, 22 July 2012

சுதந்திரம்...



மகிழ்ச்சி எதுவென்று அறியச்செய்தவன் அவன்
அன்பு எதுவென்றும்
காதல் எதுவென்றும்
துயரம் எதுவென்றும்
காமம் எதுவென்றும் உணரச்செய்த
அவனே
சிட்டுக்குருவியின் பறத்தலையும்
கற்றுத் தந்தான்
என் தொடுதலில் சில நட்சத்திரங்கள் பூத்தன
அவன் தொடுதலில் சின்னஞ்சிறு சிறகுகள் முளைத்தன
பெண் உடல்
ஆணுக்கானது அல்ல
பெண் உடல்
பெண்ணுக்கானது அல்ல
என்றறிகையில்
அறிந்தேன்

1 comment:

  1. சிந்தனைகள் சிறகுகளுடன் நட்சத்திரமாய் பிரகாசமாய் மிளிர,
    சொந்தம் வழி பந்தம் எதுவென மெல்ல மெல்ல சிலிர்க்க,
    எதுவும் மற்றதற்கு சொந்தமல்ல , என்ற சுதந்திர சூத்திரம் அவிழ ...
    மகிழ்ச்சி எதுவென்று அறியச்செய்தவன் அவன்
    சுதந்திரம்...என்றும் தேவை

    ReplyDelete