Pages

Saturday, 14 July 2012

அதிகாலைச் சூரியன் வருகை…



தூக்கத்தை இழப்பதற்கு
உன்  வார்த்தைகள் தேவையில்லை  எனக்கு
நீ
என்னை
நினைப்பதைத்  தவிர்த்துவிட்டாலே  போதும்

மனத்தின் சஞ்சலத்தை
மேலும் அதிகப்படுத்தும்
உன் மௌனம்

என்னுடல்
வெளிறி
ஒளியிழந்து  போக
உன் வருகை  நிகழாத  என் வாசல் போதும்

நம்  மகிழ்வான நாட்களில்
சிரிப்பும்  குதூகலக்  கண்ணீரும்
இன்று
காதலை  உருமாற்றியிருக்கிறது

நெடுநாள்  உறக்கம்  இழந்தபின்பு
துயிலும்  மயக்கத்தை
உன் அழைப்பே தரும்

மேலும்
உன் வருகையின்  ஒளி
வாடிய  குன்றுகளில்   கொண்டாட்டத்தை  உருவாக்கும்.

1 comment:

  1. நினைவுகளின் வாதை வழியாக , காதலின் ஒளி பாய்ச்சும் கவி வரிகள்..
    துயிலும் மயக்கத்தை உன் அழைப்பே தரும், அற்புத வசிய வார்த்தைகள் , காதலுக்கு மெழுகு ஒளியாக , மெருகு ...
    ஏன்? இந்த காதல் ஒளியும் வருகையின் ஒளியும் கலந்து கொண்டாட்டத்தை உருவாக்கும்...
    அதிகாலைச் சூரியன் வருகை…என்றும் பசுமையாக உள்ள உயிர்ப்புகளுக்கு ஆதார சுருதி ...

    ReplyDelete