Pages

Friday 6 July 2012

நினைவின் சுவை…




வண்டுகள் ரீங்காரிக்கும் இவ்விரவில்
அறியப்படாத சுவையொன்று
நாவில் ஊறியபடி இருக்கிறது

இரவுக்குப் முந்திய
பகல்
நலிவைத் தருவதாதாக இருந்தது

மழை பெய்து
குளிர்ந்த தினைச்செடிகள்
செழித்திருக்க
மலைச்சரிவில்
மூங்கிலின் நிழலும்
வெயில் படிந்த அவன் முகமும்
எனக்குள் விம்மியடங்குகின்றன

நீள்மலைத் தொடர் காட்டில்
உறங்காதிருக்கும்
வண்டுகள்
இசைத்துக்கொண்டிருக்கின்றன
நலிவின் பாடலை

இரவெல்லாம்
மூங்கிலைத் தாலாட்டும்
தென்றலின் பாதையை
துளையிடும்
வண்டுகள்

மழையில் நனைந்த
தினைச்செடிகளில் மலரும் சிரிப்பை
அவனிடம்
நினைவூட்டினால்தான் என்ன.



1 comment:

  1. 'நாவில் ஊறியபடி இருக்கிறது...' கவிதாயினி நாவில் எளிமை தமிழும் இயல்பான உணர்வுகளும் -- என்றும், நாம் ஒவ்வருவரும் மன ஆழத்தில் புதைத்து வைத்திருக்கும் உணர்வுகளை வெளி கொணர்ந்து , நம்மை இயல்பாக வாழ வைக்கும் முயற்சி..வண்டுகள் பாடும் நிலவின் பாடல், நம்மை பாடு ....அவனின் நினைவுகள் , இயற்கையாக , தினை செடி வழியாக , அற்புதமாக --' தென்றல் வந்து தீண்டும் போது,', ஏற்படும் உணர்வை ..'தினைச்செடிகளில் மலரும் சிரிப்பை..' என்ற வரிகள் ஏற்படு....இங்கு , அழகான பென்சில் வரைபடம் , கவி வரிகளை , இன்னும் மெருகு...'நினைவின் சுவை…' இனிய சுவை மொட்டுகளாக நாம் நாவில் மட்டுமல்ல , என்றும் நம் ஆழ உணர்வில் கூட..

    ReplyDelete