Pages

Wednesday, 4 July 2012

சீனப் பெருஞ்சுவர் …




இத்தனை அகலமாக இருக்குமென்பது
எனக்குத்  தெரியாது
நான்
அப்படிப்பட்ட  தேசத்திலிருந்து வந்தவளல்ல
இத்தனை பெரிய  சுவர் தேவையா
என்பதும் எனக்கு தெரியாது
எத்தனை எத்தனை   கற்கள்
எத்தனை எத்தனை  உயரம்
எத்தனை எத்தனை  உழைப்பு
இத்தனைக்கும் மேல்  நடக்கிறார்கள்
ஓடுகிறார்கள்
வாகனங்களை ஓட்டுகிறார்கள்
ஆகாயத்தின்  மீதிருந்து  படமெடுக்கிறார்கள்
எதிலும் பதிவாகவில்லை
அத்தனை  அத்தனை மரணங்கள் 
ஒரு முறை 
ஒரு கல் நகர்ந்தது 
ஒன்பது பேர் இறந்தார்கள் 
எத்தனையோ கற்கள்  நகர்ந்திருக்கின்றன 
நான் 
என் மெல்லிய  பாதங்கள் 
அதன்மீது பட்டு நோகாத  வண்ணம் நடக்கின்றேன் 
ஓர்  அஞ்சலி போல 
ஆன்மாக்கள் வானத்தில்  மிதக்கின்றன 
அதைப்  பார்த்தவாறே
அடுத்த  என்  மென்னடியை
எடுத்து  வைக்கின்றேன் .

No comments:

Post a Comment