Pages

Saturday, 30 June 2012

நிலாக்காலம் . . .




                     
                இந்த நிலவு 
                இத்தனை  குளிர்வாய் இருக்கிறது 
                இரவு 
                கொண்டாடுகிறது   நிலவை 
                அமானுஷ்ய  சக்தி பொழிகிறது  
                மனம்  பிறண்டவர்கள்
                தன்னிலை மறந்தவர்கள் 
                காமம் பூண்டவர்கள் என 
                அனைவரும்  நிலவின்  ஒளியில்  நனைந்து 
                பூக்கிறார்கள்
                இந்த நிலவு 
                ஏன் உறங்கப்  போகிறது 
                என்ற  ரகசியம்  புரியாமல் 
                பார்த்துக்  கொண்டேயிருக்கிறேன் 
                நிலவை .

1 comment:

  1. பிரபஞ்சத்தின் அனைத்து உறவுகளும், அணைத்து மகிழ்ந்து ,புதிய நாளின் தரிசனத்தில் உயிர்ப்போடு வாழ்வது , இந்த நிலவின் குளுமை
    ரகசியத்தில்தான் ..நிலவு உறங்கபோவது , தன் வெப்பத்தை தனித்து, மீண்டும் குளுமையாக பவனி வரத்தான்..படமும் கவிதையும் மிகவும் அழகு ..
    சிறுமி ,நானும் இந்த உலகை நிலவு போல் ,என் அன்பால் குளிர்விப்பேன் என்று மனதிற்குள் வேண்டி...நிலவை நோக்கி ..

    ReplyDelete