Pages

Thursday 28 June 2012

வெளிப்பாடு . . .



உன் நினைவில்
தாமரைக்  கொடியெனச்
சுகித்திருக்க
கதிர்களால்  உயிரூட்டுகின்றாய்

உன்னை விட்டகன்றால்
பிரிவுத்துயர்
என்னை வாட்ட
காய்ந்துச்  சாகின்றேன்

நெருப்பை  விழுங்கிக்  கொண்டு
குளிர்  ஒளியை  வெளியெங்கும்
விரிக்கும்  நிலவென

பிரிவின்  வாதையைச்  சுமந்து கொண்டு
புன்னகையோடு  உற்றோரை
எதிர்கொள்கிறேன் 

உன்னைப் பிரிகையில்
பெருகும்  துயரத்திற்குக்
குறைந்தது  இல்லை

நினைவின் மகிழ்வு

1 comment:

  1. நெருப்பை விழுங்கிக் கொண்டு குளிர் ஒளியை வெளியெங்கும்...' அன்பு கிரணம் இது போன்ற மகிழ்ச்சியான ஆச்சர்ய நிகழ்வுகளை ....
    பிரிவு துயரம்=நினைவின் மகிழ்வு , இரண்டும் ஒன்று ? எப்பொழுது , 'ஒன்று ஒன்றோடு இதயபூர்வமாய் ...
    பிரிவின் வாதையைச் சுமந்து கொண்டு புன்னகையோடு--சுமக்கும் சுமைகள், அன்பு பஞ்சால் அல்லவா நிறைந்து ...
    வெளிப்பாடு . அன்பின் வேதனை, காதல் வீணையின் சுகமான ராகங்கள் ...

    ReplyDelete