Pages

Tuesday, 26 June 2012

மலர்தல். . .




நிலாவென
நான்
ஒளிர்வதாகக்  கூறுகிறாய்
சூரியனாய்  இருந்து  கொண்டு

என்
நினைவின்   அடுக்குகளில்
எத்தனையோ  கதைகள்
பொதிந்துள்ளன 

நிலா இரவுகள்
அன்று  இருந்தது  போல்
இல்லை

பால்யம்
கடந்த  இந்த  இரவுகளில்

பாட்டிகளின்
மரபில்
வந்து போன  இளவரசனாய்

ஏழு  குதிரைகளில்
நீ
வருகையில்

சூர்யகாந்தியாய்
மலர்கிறேன்

நிலா ஒளிரும்  பொழுதிலும் .

1 comment:

  1. பாட்டி கதை வழியாக , ஒரு அற்புத அறிவியல் உண்மையை எடுத்துக்காட்டி ,
    அழகான ஒரு காதல் மென்மை, மேன்மையாக உணரும் தருணம் ...
    வாசகன் மனசு இறக்கை கட்டி ...வானமெனும் ...ஓடி வரும் மேகங்களாக
    மலர்தல்---மொட்டு மலரும் நேர க்ஷண மகிழ்ச்சி ..தொடர் வண்ண மின்னல்..

    ReplyDelete